அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவு



நூறுல் ஹுதா உமர்-
கில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக நிந்தவூர் பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 02.05.2023 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 26 ஆவது தேசிய மாநாட்டிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுர்த்தி முகமையாளர் ஏ.சீ.அன்வர் கடந்த (19) வெள்ளிக்கிழமை பத்தரமுல்லை யிலுள்ள அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்க தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற முதலாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

நிந்தவூர் பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகமையாளர் ஏ.சீ.அன்வர் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவராக செயற்பட்டு வருவதுடன் தனது சிறந்த தலைமையினூடாக சமுர்த்தி முகாமையாளர் களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட சமுர்த்தி முகமையாளர் ஏ.சீ.அன்வர் தனது 29 வருட கால சேவையினுள் அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக தலைமைப் பீட சமுர்த்தி முகமையாளராக கடமையாற்றியுள்ளார்.

மேலும் இவர் கடந்த காலங்களில் அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக செயற்பட்டு வந்த நிலையிலேயே இன்று சமுர்த்தி முகமையாளர் ஏ.சீ.அன்வர் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுர்த்தி முகமையாளர் ஏ.சீ.அன்வருக்கு அம்பாறை மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :