பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வழிகாட்டலின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மெய்நிகர்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரியில் ஆரம்பமாகியது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இன்றும், நாளையும் நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சயில், இந்த நவீன காலத்திற்கேற்ப தமது வாழக்கை மற்றும் இதர செயற்பாடுகளை எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என இந்த கண்காட்சி அமையப்பெற்றுள்ளன.
இதன் ஆரம்ப வைபவத்தில் நுவரெலியா கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆற்றல்கள் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்திருந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், அவர்களை வழிநடத்திய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம்க்கு நன்றியை தெரிவித்தார்.
அதேபோல நவீன உலகை வெல்வதற்காக நவீன தொழில்நுட்பம் சார்ந்த தமது திறமைகளை மேலும் வெளிபடுத்தி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஏதேனும் ஒத்துழைப்புகள் தேவை என்னும் பட்சத்தில் அதனை செய்து கொடுப்பதற்கு தான் தயார் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
0 comments :
Post a Comment