ஜூம்ஆத் தொழுகையை 12.45 மணியுடன் முடிவுறுத்துமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்



ஏயெஸ் மெளலானா-
ற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜூம்ஆத் தொழுகையினை பிற்பகல் 12.45 மணியுடன் நிறைவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மியத்துல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினூடாக இதனை வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் உரிய நேரத்திற்கு பரீட்சை மண்டபத்தை சென்றடைவதற்கு ஏதுவாக இவ்வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கி, ஜூம்ஆத் தொழுகையை பிற்பகல் 12.45 மணிக்கு முன்னதாக நிறைவு செய்யுமாறு ஜூம்ஆப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் உலமாக்களை, அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா கேட்டுக் கொண்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :