நோன்புப் பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருதில் சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனையும் !நூருல் ஹுதா உமர்-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனையும் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெளசி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சி எதிர்வரும் 2023.04.17,18 திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இடம்பெறவுள்ளது. இதில் ஆடை அணிகலங்கள், கிராமிய உணவு உற்பத்திகள் உள்ளிட்ட பெருநாளைக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
இக்கண்காட்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது காட்சி கூடங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

இக்கண்காட்சியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட காட்சிக் கூடங்கள் தேவைப்படும் தொழில் முயற்சியாளர்கள், உள்ளூர், வெளியூர் மற்றும் தனியார் நிறுவனங்கள் 077 350 8509, 077 814 3568 ஆகிய இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கடைகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :