ஆயித்தியமலை, கரவெட்டியாறு பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.



நூருல் ஹுதா உமர்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கரவெட்டியாறு விஜிதா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வானது மட்டக்களப்பு ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு. துரைச்சாமி வித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ. கஜரூபன், எஸ்.காந்தன், துலக்சன், தெ.சிருஸ்காந், ஆகியோர் கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர். மேலும் இன் நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வி. வசந்தராசா, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ். கலைவாணி, ஆசிரியர்களான எஸ். மதுசுதன், எஸ். சதகுகன், இ. கேதிஸ்வரி, என். விஜய அனிதா, எஸ்.செல்வேந்திரா ஆகியோருடன் கரவெட்டியாறு விஜிதா வித்தியாலய ஆசிரியர்களான எஸ்.டனுஸ்கா, வினோதா, பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :