சாய்ந்தமருது பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தின் இப்தார் நிகழ்வு : மூத்த கலைஞர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்பு !நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணக்க இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் இன்று (12) சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

நோன்பின் மாண்புகள், சமூக நல்லிணக்கம், சகோரத்துவம், இஸ்லாம் வலியுறுத்தும் வாழ்வியல் தொடர்பில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரும் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய நிறைவேற்று குழு உறுப்பினருமான மௌலவி ஏ.எம். தௌபீக் (நளீமி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்திக்குழு பிரதி செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தொகுத்தளித்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பழீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், நிதி உதவியாளர் எம்.எம். முஹம்மட், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், கலாச்சார மத்திய நிலைய பாடநெறி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மூத்த கலைஞர்கள், கலாச்சார மத்திய நிலைய நிர்வாகிகள் , கலை இலக்கியத்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவுரையை கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்திக்குழு செயலாளர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானா நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :