சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார்!



நூருல் ஹுதா உமர்-
சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் இன்று (20) வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் இப்தார் சிந்தனையை சாய்ந்தமருது அல்- அக்ஸா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஆர்.எம். றியாஸ் (பஹ்மி) நிகழ்த்தினார்.

நிகழ்வின் விசேட விருந்தினர்களாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பல்கலைக்கழக கலை,கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம். எம்.முனாஸ், கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.எம். ஜாபீர், சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.என்.எம். மலிக், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் ஏ.எம்.றியாஸ், சொப்டா நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.நஸீர், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம், சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், தேசிய காங்கிரஸ் கல்முனை அமைப்பாளர் பிரபல ஆசிரியர் றிசாத் செரீப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஜுனைதீன் மான்குட்டி, சிரேஷ்ட ஊடகவியலாளர், ஓய்வுபெற்ற பிரதிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார், சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பணிப்பாளர் சபை உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான், திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பொது நிறுவனங்களின் பிரதானிகள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், ஊடகவியலாளர்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், மதரஸா மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனா மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த காலங்களில் நடைபெறாமல் இருந்த இந்நிகழ்வுகள் இப்போது நாட்டின் சீரான போக்குகள் காரணமாக தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :