கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மருதமுனை தொடக்கம் ஒலுவில் வரையான வீதிகளுக்கு புதிய பெயர்ப் பலகை நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது
கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி எம்.எம்.எம்.முனாஸின் நேரடிக் கண்கானிப்பில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரதேசத்திற்கு செல்லும் பொதுமக்கள் குறித்த ஒரு வீதியை இலகுவாக சென்றடைய அவ்வீதியின் பெயர்ப்பலகை மிகவும் அத்தியாவசியமானதாகும்.
நீண்ட காலமாக குறித்த வீதிகளுக்கு பெயர்பலகை இல்லாத குறைபாட்டை கவனத்திற்கொண்டு கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி முனாஸ் புதிய பெயர் பலகை நடும் வேலையினை மேற்கொண்டமை பாராட்டுக்குரியதாகும்.
இதில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பு வீதிகளுக்கு எந்திரி முனாஸினால் இப்புதிய பெயர் பலகை இட்டமை மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment