அம்பாறை மாவட்டத்தில் இம்முறை வெளியான முகாமைத்துவ உதவியாளர் சூப்பரா ரக பரீட்சையில் ஒரே ஒரு தமிழ் உத்தியோகத்தர் தெரிவாகி இருக்கின்றார்.
காரைதீவு பிரதேச செயலகத்தின் நிதி உதவியாளராக பணியாற்றும் ஆர்.கணேசமூர்த்தி இவ்வாறு சூப்பரா பரீட்சையில் சித்தி அடைந்து நிர்வாக உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த கணேசமூர்த்தி முன்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலக பதில் நிருவாக உத்தியோகத்தராக பல வருடங்கள் சேவையாற்றி வந்தார்.
அடுத்த வாரம் அவருக்கான புதிய பிரதேச செயலக ஸ்தானம் வழங்கப்பட இருக்கின்றது. பெரும்பாலும் திருக்கோவில் பிரதேச செயலகம் வழங்கப்படலாமெனத் தெரியவருகிறது.
அம்பாறை மாவட்டத்தில் இப் பரீட்சையில் தெரிவான ஏனையோர் அனைவரும் சிங்கள முஸ்லிம் உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment