முறைகேடான ஆசிரியர் இடமாற்றமும், புறக்கணிக்கப்பட்டு வரும் புல்மோட்டை பாடசாலைகளும்!அபு அலா-
புல்மோட்டையிலுள்ள சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் இந்நிலையில், புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர் எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றத்தால் பாடரீதியான பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்களும், அப்பிரதேச மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு தகுந்த நடவடிக்கை எட்டப்படும்வரை எங்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என அப்பிரதேச மக்களும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் உடனடி நடவடிக்கையினை எடுக்கக்கோரிய கடிதத்தினை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் (03) ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர், கல்வி அமைச்சர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறவிருக்கின்ற இந்நிலையில், புல்மோட்டையில் காணப்படும் சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம் காணப்படும் நிலையில், புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியரான எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றம் மூலம், பாடரீதியான பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான இடமாற்ற நடவடிக்கைகளில் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்களை செய்வருவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் இவ்வாறான செயற்பாடுகளின் ஆவனங்களை எங்களால் நிருபிக்கக்கூடியதாக இருக்கின்றது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலயக்கல்வி அலுவலகம் ஓர் பழிவாங்கள் அலுவலகமாக திகழ்ந்து வருவதை, பெற்றோர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்விடயங்களைப் பார்க்கின்றபோது பெரும் கவலையளிக்கின்றது. அச்செயற்பாட்டை நாங்கள் மிக வன்மையாகவும் கண்டிக்கின்றோம். எனவே, இவ்வாறான திட்டமிட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்துச் செய்வதுடன், அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கையினை ஜனாதிபதி உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :