மருதமுனையில் உள்ள சமூக நிறுவனங்களுக்கு இலவச மெகா (LED) மின்குமிழ்களைவழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (8) நடைபெற்றது.
இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் அனுசரனையில் மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரி, மஸ்ஜிதுல் நூறானியா, மருதமுனை கியூமன் லீன்க் மாற்றுத்திறனாளிகளுக்கான வளப்படுத்தல் மத்திய நிலையம் போன்ற சமூக நிறுவனங்களுக்கு பெறுமதி வாய்ந்த LED மெகா மின்குமிழ்கள் இதன் போது இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் பிரதானி ரைஸுல் ஹக்கீம் .சமூக நலன்கருதி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். இதற்கு மேலதிகமாக அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல், மாணவர்களின் கல்விக்கு கைகொடுத்தல் குர்ஆன் பிரதிகளை இலவசமாக வழங்குதல்
என பல சமூக நல வேலைத்திட்டங்களை பைத்துல் ஹெல்ப் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
0 comments :
Post a Comment