மருதமுனை சைல்ட் பெஸ்ட் (CHILD FIRST ENGLISH COLLEGE) ஆங்கிலக் கல்லூரியின் தலைவரும்,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,ஆங்கில மொழிப்பிரிவின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக இலங்கை கடற்படையின் கல்முனை முகாம் கட்டளைத் தளபதி தம்மிக்க ஏக்கநாயக்க,தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் சீ.ஐ.சீ பிரைவட் லிமிட்டட் பிரதேச விற்பனை முகாமையாளர் எம்.பி.பௌக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.றசான்,டொக்டர் ஜெ.ஹைளுல் மசாஹித், டொக்டர் எம்.ஏ.அஹமட் சுஜா, கல்முனை மாநகரசபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ், டொக்டர் எம்.ஐ.எம்.நௌசாத், சுபியான் ஹாட்வெயார் எம்.எஸ்.அம்சார் அஹமத், எம்.ஐ.எம்.றஜாப்டீன் (எம்.எம்.சி) ஆகியோருடன் ஏ.எஸ்.எம்.சஹ்மி அவர்களும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்த அதேவேளை ஓய்வுபெற்ற ஆசிரியை லக்சாந்தி செல்வராஜா அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
சைல்ட் பெஸ்ட் (CHILD FIRST ENGLISH COLLEGE) ஆங்கிலக் கல்லூரி மாணவர்களின் தனி மற்றும் குழு நிகழ்வுகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. அத்துடன் கல்லூரியின் தலைவரும்,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,ஆங்கில மொழிப்பிரிவின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் அவர்களினதும் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்களதும் உரைகள் பார்வையாளர்களை மிகவும் சிந்திக்க வைத்தது.
நிகழ்வின்போது கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் அவர்கள் பெற்றோர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் அதிதிகள் ஞாபக சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள், வெற்றிப்பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment