பிரதேச சபை உறுப்பினர்களின் அசமந்தப் போக்கே அல் முனீரா மற்றும் அறபா வட்டார வீதிகள் நீரில் மூழ்கக்காரணம்: வேட்பாளர் அமீர் தெரிவிப்பு



ட்டாளைச்சேனை அல்-முனீரா மற்றும் அரபா வட்டாரங்களின் அட்டாளைச்சேனை 6, 8ஆம் பிரிவுகளில் உள்ள அநேகமான வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் மழை காலங்களில் குறித்த வீதிகள் நீரில் மூழ்கி குளங்களைப் போன்று காட்சியளிப்பதாக வேட்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அமீர், மக்களைச் சந்திக்கும் பொருட்டு குறித்த பகுதிகளுக்கு சென்ற போது இவ்வாறானதொரு நிலைமையினை அவதானித்ததாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த உதுமாலெப்பை கூட அட்டாளைச்சேனை 6, 8ஆம் பிரிவு வீதிகளை கண்டுகொள்ளவில்லை. அதனாலே அப்பகுதியிலுள்ள பெரும்பாலன வீதிகள் கிறவலிடப்பட்ட நிலையிலே குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது.

அட்டாளைச்சேனை 6, 8ஆம் பிரிவுகளில் குன்றும் குழியுமாக காணப்படும் இவ்வீதிகள் மழை காலங்களில் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது.

குறிப்பாக அப்பகுதியிலுள்ள மக்கள் குறித்த வீதிகளினால் பயணம் செய்ய முடியாமல் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், பாடசாலை செல்லும் மாணவர்கள் தங்களது பாதணிகளை கைகளிலே கொண்டு செல்ல வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

தமது வாக்குகளைப் பெற்று பதவிகளை அடைந்தவர்கள் தங்களுடைய தேவைகளை மறந்து செயற்படுவதாகவும், தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முறையிடுவதற்கு அவர்களை தேடி அலைவதாகவும் அங்குள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மக்களுடைய பொதுவான தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகவே மக்கள் வாக்களித்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை அனுப்புகின்றனர். மக்களின் வாக்குகளை பெற்று பதவிகளை அடைந்தவர்கள் மக்களின் தேவைகள் அபிலாசைகளை நிறைவேற்ற தவறுகின்றனர்.

பிரதேச சபையில் பல கோடி ரூபா பணங்களை சேமித்து வைத்துள்ள தவிசாளரும் உறுப்பினர்களும் குறித்த வீதிகளை செப்பனிட்டு மக்களின் சீரான போக்குவரத்திற்கு வழிசமைத்து கொடுக்காமை கவலையான விடயமாகும்.
மக்களுடைய ஆணையினைப் பெற்று மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களையும், வட்டாரம் கடந்து தேர்தலுக்காக இறக்குமதி செய்யட்டவர்களையும் இம்முறை மக்கள் புறக்கனிக்க வேண்டும் எனவும் அமீர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :