காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் திருவுருவச் சிலை நேற்று முன்தினம் பூரணை தினத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
இத் திருவுருவச் சிலையானது நேற்று முன் தினம்(06.03.2023) சித்தானைக்குட்டி ஜீவ சமாதிக்கு பின்புறத்தில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் சித்தர் குருபூஜைக்கு முதல்நாள் (04.08.2022) குருக்கள்மடத்தில் செய்யப்பட்டு இச் சிலை கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கின்றது .
காரைதீவு சைவ மக்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை, பூஜை உபயகாரர்கள். அனைவரும் வருகை தந்து தங்களின் மேலான ஆலோசனைகளையும் எதிர் கால ஆலய வளர்ச்சிக்கு ஏதுவான திட்டங்களையும், சிறந்த புதிய நிர்வாகசபை உறுப்பினர்களையும் தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு அழைக்கிறோம் என செயலாளர் கேட்டுள்ளார்.
0 comments :
Post a Comment