அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின்( சுவாட்- Swoad) தலைவரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம்( வயது 46) நேற்று நள்ளிரவு இடம் பெற்ற கோரவிபத்தில் பரிதாபகரமாக பலியானார்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சுவாட் வானைச் செலுத்திக் கொண்டுசென்றவேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பொலநறுவை வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் நேற்று(29) நள்ளிரவு 12.40 மணியளவில் எதிராக வந்த மரக்கறி லாறியுடன் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும் திருக்கோவில் பிரதேச தம்பட்டையை வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் பரமசிங்கம் அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தில் நிருவாக தலைவராகவும் சிவில்சமுககூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியாகவும் இருந்து பல அளப்பரிய தொண்டாற்றியவராவார்.
ஒரு பிள்ளையின் தந்தையான பரம சிங்கம் ஸ்தலத்தில் உயிரிழந்தார். அருகில் இருந்த சாரதி படுகாயத்துக்குள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.பின் ஆசனத்தில் இருந்த சுவாட் அமைப்பின் தலைமை உத்தியோகத்தர் கே. பிரேமலதன் காயங்களுக்கு உள்ளாகி அவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். வெலிக்கந்தைப் போக்குவரத்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சம்பவம் இடம்பெற்றவேளை கொழும்பிலிருந்து தம்பிலுவில் நோக்கி வந்துகொண்டிருந்த பெற்றி நியூஸ் இணையதளத்தின் ஸ்தாபகரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் ஊடகவியலாளருமான இரா.சயனொளிபவன் ஸ்தலத்துக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார்.
சினிமாவில் வருவதுபோல் விபத்தில் சின்னாபின்னமான வானைப் பார்த்தபோது அதிர்ந்து விட்டார். காரணம் விபத்தில் அகப்பட்டு சாரதி ஆசனத்திலேயே பலியானவர் தனது சொந்த மைத்துனர் பரமசிங்கம் என்பதுதான். சயனொளிபவனினி தந்தையின் மூத்த சகோதரியின் புதல்வன் பரமசிங்கன் ஆவார்.
உடனடியாக செயற்பட்டு அனைவரையும் பொலனறுவை வைத்தியசாலையில் சேர்த்து குடும்பத்தினருக்கும் அறிவித்தல் கொடுத்தார்.
0 comments :
Post a Comment