முழுமையான பிரதேச செயலகமாக உள்ள கல்முனை நகரை கூறுபோட்டு அதன் பிரதான பாதியை கல்முனை வடக்கு என்று அழைக்கப்படுகின்ற பாண்டிருப்பு- சேனைக்குடியிருப்புக்காக கோரப்படுகின்ற பிரதேச செயலகத்தோடு இணைக்க கோருவதையே முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்ற விபரத்தை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாராளுமன்ற பேச்சுக்கான பதிலாக பாராளுமன்றத்தில் வழங்கத்தயாரான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் யார்? என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு இன்றே ஓர் கணக்காளரை நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மிக ஆக்ரோசமாக பாராளுமன்றில் நேற்று பேசினார். கல்முனை வடக்கு என்றொரு பிரதேச செயலகம் இல்லை. கல்முனையில் உப பிரதேச செயலகமே இருக்கிறது. அதனைப் பிரதேச செயலகமாக தரமுயர்த்த ஆட்சேபனையுமில்லை. ஆனாலும் கல்முனை நகரைக் கூறுபோட்டு அதன் பிரதான பாதியை கல்முனை வடக்கு என்று கோரப்படுகின்ற பிரதேச செயலகமாக கோருவதையே முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்
ஒவ்வொரு தேர்தலிலும் கல்முனைப் பிரதேச செயலகப் பிரச்சினையை சொல்லியே வாக்குப் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது கட்சித் தலைவர்களும் இன்றுவரை கல்முனைப் பிரச்சினை என்ன? என்றொரு தெளிவான விளக்கத்தை பாராளுமன்றில் வழங்கவில்லை. கல்முனைப் பிரச்சினை தொடர கல்முனை வாக்காளர்களே காரணம். கல்முனை முஸ்லிம்கள் தலையில் கைவைக்க முன் விழித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment