பல்லாயிரக்கணக்கான கல்விமான்கள், பன்முக ஆளுமைகள், அரசியல் தலைமைகளை உருவாக்கிய நீண்ட வரலாறும் பாரம்பரியமும் கொண்ட சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தே.பாடசாலை)
2023ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வுகள் வெகுசிறப்பாக இன்று நடைபெற்று முடிந்தது.
பாடசாலை அதிபர் திருமதி யூ. நஜீபா ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம். செய்யத் உமர் மௌலானா மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனிபா உட்பட சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், அரசியல் பிரமுகர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாடசாலை காணிக்கான பத்திரத்தை பிரதேச செயலாளர் கல்வித்திணைக்களத்தின் சார்பில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம். செய்யத் உமர் மௌலானாவிடம் கையளித்தார்.
சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் போன்ற இல்லங்கள் போட்டியிட்ட இந்த இல்லவிளையாட்டு போட்டியில் சிவப்பு இல்லம் இவ்வாண்டுக்கான சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
0 comments :
Post a Comment