மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முப்பெரும் விழா !!









நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலய புலமையாளர்கள் கௌரவிப்பும், கணனி தொழிநுட்ப பிரிவு திறப்பும், பாடசாலையில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றலாகி சென்ற ஆசிரியர்கள் கௌரவிப்பும், சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் பாடசாலை முன்றலில் விமர்சையாக மாணவர்கள் மற்றும் கிழக்கிலங்கை கலைஞர்களின் கலை நிகழ்வுகளுடன் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறுகிய காலத்தில் கல்முனை கல்வி வலயத்தில் குறித்த இப்பாடசாலை அடைந்துள்ள வரலாற்று சாதனைகள், பாடசாலையின் கல்வி மற்றும் கல்விசாரா ஏனைய சாதனைகள் அடைவுமட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றினார். தொடர்ந்தும் பாடசாலையில் உள்ள பௌதீக வளங்களை மேம்படுத்த அரச நிதிகளை மட்டும் நம்பிக்கொண்டிராமல் பழைய மாணவர்கள், தனவந்தர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை கொண்டும் நலன்விரும்பிகளை கொண்டும் எவ்வாறு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு பிரதேச மும்மாதிரிகளை எடுத்துக்காட்டி பேசினார்.

சாதனையாளர்கள் பாராட்டப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை கல்விமாவட்ட பொறியலாளர் ஏ.எம். ஸாகீர் கௌரவ அதிதியாகவும், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டேவிட் விசேட அதிதியாகவும் மேலும் பல கல்வி அதிகாரிகள், சாய்ந்தமருது, காரைதீவு கோட்டங்களின் ஏனைய பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், வர்த்தகர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன அறிவிப்பாளர் ஆசிரியர் ஏ.எல். நயீம் தொகுத்து வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :