வரி கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



அந்துவன்-
ரி கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிராக நுவரெலியா – இராகலை நகரில் ஒன்று திரண்ட ஆசிரியர், அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரப்பாட்டத்தின் போது, கறுப்பு கொடிகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் ஈடுப்பட்டனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வரி சுமை என்பன மக்கள் மீது தான்தோன்றி தனமாக தினிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மறுபுறத்தில் மக்களின் அங்கிகாரமில்லாத ரணில் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை குழித்தோன்டி புதைத்து வருகிறது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதன் மூலமும் பாராளுமன்றத்தில் சிறுபிள்ளைதனமாக கருத்துக்களை முன்வைத்ததன் மூலமும் தனது அரசியல் வங்குரோத்து தனத்தை வெளிபடுத்திக் கொண்டார் என போராட்டகாரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :