வாசியோகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்திய சித்தர் மகாயோகி மகா சமாதியானார்!



வி.ரி. சகாதேவராஜா-
ந்து மதத்திற்கே உரித்தான வாசி யோகக்கலையை உலகெங்கும் பரப்பிய இந்தியாவைச் சேர்ந்த மகான் யோகி ராஜா கிருஷ்ணமூர்த்தி ஐயா மதுரையில் மஹா சமாதி அடைந்தார்.

1944இல் பிறந்த இவர் பொறியியல் மற்றும் வேளாண்மைத்துறையில் சிறந்து விளங்கி இந்திய வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துறை தலைவராக இருந்தார். தமிழ் நாட்டில் தலை சிறந்த விஞ்ஞானியாகவும் இவர் இருந்தார்.
பின்னர் 40வருடத்திற்கு மேலாக சித்தர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.

வாசி யோகம் என்றால் என்ன என்பது குறித்து உலகிற்கு அறியச் செய்த முக்கிய குரு இவராவார்.
முருகப்பெருமான் பரமகுருவாய் இருந்து தனது 18 சீடர்களுக்கு உபதேசித்த மஹாயோக முறையே வாசி யோகமாகும்
இதனை அறிந்தவர்கள் சிலரே உலகம் முழுவதும் இவரின் மூலம் வாசியோகம் பரவியது.
"முருகனின் சாகா கல்வி வாசியோகம் என்னும் நூல்” பிரபல்யம் பெற்றதாக விளங்குகின்றது.
இந்த நூலை பலரும் அறிந்து பயன் பெற்ற இவரது மஹாசமாதி நிகழ்வு தமிழ்நாடு மதுரை அழகர் கோயில் மாத்தூர் என்ற இடத்தில் உள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகளிலும் ஸ்ரீ சிவம் காகபுஜண்டர் சித்தர் பீடத்தின் மூலம் இவரது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நமது சித்தர் பெருமக்கள் பல அரிய விடயங்களை எமக்குத்தந்துள்ளனர்.
அவற்றுள் யோகக்கலையும் ஒன்றாகும். யோகக் கலைகளுள் முக்கியமானது வாசி யோகம் என்னும் அம்சமாகும். வாசி யோகக்கலையை அறிந்த சிலர் மாத்திரமே எம் மத்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :