நேற்று 28.03.2023 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழு கூட்டமும் கலந்துரையாடலும் இக்குழுவின் இணைப்பாளர் திரு.மனோகரன் தலைமையில் இடம்பெற்றது. மேலும் உதவி இணைப்பாளராக ஜனாப் ஹமீட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். ஒவ்வொரு மதங்களைக் கொண்ட மதத் தலைவர்கள் மூலம் பிரார்த்தனையுடன் இக்கலந்துரையாடல் இன்றைய தினம் ஆரம்பமானது.
இதன் போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சர்வ மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதகுருமார்கள் மற்றும் சர்வ மத அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள்,சமூகமட்ட குழுக்கள், பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் குழுக்கள்,இளைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட செயற்பாட்டுக்கான அனுசரணையை அகில இலங்கை சமாதான பேரவை நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நடைமுறைப்படுத்தி இனங்களுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பரம்,புரிந்துணர்வு என்பவற்றை கட்டியெழுப்ப பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்போது அண்மையில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ள ஏறாவூர் புன்னக்குடா வீதிக்கான பெயர் மாற்றம் தொடர்பாக ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட விடயம் தொடர்பாகவும் சர்வ மத பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக தமது எதிர்ப்பினை எழுத்து மூலமாக குறிப்பிட்ட தரப்பினருக்கு வழங்குவதற்கு இந்நிகழ்வில் தீர்மானங்களை நிறைவேற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment