இலங்கை கபடி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட NATIONAL KABADDI CHAMPIONSHIP - 2023 தொடர் இம் மாதம் 24ம்,25ம் திகதிகளில் பண்டுவஸ்ணுவர ஹெட்டிபோல பொது மைதானத்தில் இடம்பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் மதீனா அணி தொடரின் இறுதிப்போட்டியில் கேகாலை மாவட்ட அணியுடன் 69:70 என்ற கணக்கில் 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தினைப் பெற்று தேசிய ரீதியில் இன்னுமொரு தடவை தனது பெயரை பதிந்து கொண்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச கபடி அரங்கில் கிழக்கு பிராந்தியத்தின் தனி அடையாளமாய்த் திகழும் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தினையும், தொடரில் பங்கு கொண்ட வீரர்களையும், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களையும் பிரமுகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment