பாடசாலையின் அதிபர் எம்.எம்.மஹ்சூர் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். நஜீப் மற்றும் கௌரவ அதிதியாக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.தாஜ் மற்றும் பாடசாலையின் ஊடகப் பொறுப்பாளர்களான ரி.என்.ஹிதாயா, ரி.பி.சங்கர்,எப்.பஹாஸா மற்றும் ஊடமன்ற தலைவர் ஏ.எம்.எம்.அனஸ்; உள்ளிட்ட ஊடக மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஊடக மன்றத்தின் இணையத்தளம், ஊடக மன்றத்தின் பெயர்ப்பலகை என்பன அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன் ஊடக மன்ற உறுப்பினர்களுக்கு சின்னம் சூட்டி பாடசாலையின் ஊடக அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் ஊடக மன்றத்தால் நடாத்தப்பட்ட ஊடகத் துறையின் குரல் தெரிவுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது பாடசாலையின் ஆசிரியர் அஸ்பாக் ஊடக மன்றத்திற்கு கமரா ஸ்டேண்ட் ஒன்றையும் அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment