போலிச் சான்றிதல்கள் வழங்கும் நிறுவனமாக CMT Campus ஒருபோதும் இராது.- தவிசாளர் ஏ.எம்.ஜெமீல்!



ன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை ஏமாற்றி பெரும் தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு போலியான முறையில், கல்விச் சான்றிதல்கள் வழங்கும் கலாச்சாரம் தற்போது பரவலாக இடம்பெற்றுவருவதாகவும் அவ்வாறான மோசடியான வேலைகளை CMT Campus ஒருபோதும் செய்யாது என்று CMT Campus யின் தவிசாளரும் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

பிராந்தியத்தின் முன்னணி தனியார் உயர் கல்வி நிறுவனமான CMT Campus ஏற்பாடு செய்திருந்த நாட்டின் 75 ஆவது சுதந்திரதின விஷேட நிகழ்வும் “Let’s build our motherland through professional skills” எனும் தொனிப்பொருளின் கீழ் பிராந்தியத்திலுள்ள தேர்ச்சிபெற்ற 75 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் CMT Campus எனப்படும் உயர் கல்வி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் றிஸ்டி ஷரீப் தலைமையில் இடம்பெற்றது.

"தொழில் திறன் மூலம் நமது தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளிலான இந்த விஷேட நிகழ்வுக்கு Dr.ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணை வழங்கியிருந்தது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக CMT Campus யின் தவிசாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்ததுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் சிதைவடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சிறந்த கல்வியாளர்களின் அவசியம் உணரப்பட்டுள்ள நிலையில் CMT Campus, தொழில் மேம்பாட்டுக்கும் அதிநவீன தொழினுட்ப திறனூடான வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகுக்கும் வகையில் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஆறு மாத முழுநேர கற்கை நெறியினை 75 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் அடிப்படையில் வழங்கியுள்ளது. இக் கற்கை நெறியானது தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம், உளவியல் மற்றும் ஆங்கில, சிங்கள மொழிப்பயிற்சி என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.

மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் பொறியியல், தொழில்நுட்பம், முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம், ஹோட்டேல் முகாமைத்துவம், தாதி, உதவித் தாதி, சுகாதார உதவியாளர்கள் போன்ற பயிற்சி நெறிகளுடன் ஆங்கில பயிற்சி நெறிகளையும் வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்ட்டன.

அத்துடன் எத்துறையானாலும் பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் அடங்கிய பாடநெறியிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரதம நிறைவேற்று பணிப்பாளர் றிஸ்டி ஷரீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், கல்முனை இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளைத்தளபதி மேஜர் தர்சன தரங்க ,பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க ஆகியோருடன் CMT Campus உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்களான எம்.ஏ.நளீர் மற்றும் பி.எம். நளீம் முகைடீன் ஆகியோருடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான எம்.எச்.தௌபீக், ஏ.ஜௌபர் போன்றோருடன் புலமைப்பரிசில்களைப் பெற்ற மாணவர்களும் நிறுவனத்தின் உயர்மட்ட உறுப்பினர்களும் பங்குகொண்டிருந்தனர்.

தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி ஜெமீல், நாடு இப்போதுள்ள நிலையில் நாட்டை மீட்க சிறந்த கல்வியாளர்களாலேயே முடியும் என்றும் அந்த அடிப்படையிலேயே தனது இளமைக்காலம் முதல் இப்பிராந்தியத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக தன்னால் முடிந்த அத்தனையையும் செய்து வருவதாகவும் அந்த வரிசையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக தானும் உச்ச பங்களிப்பைச் செய்ததாகவும் குறித்த பல்கலைக்கழகத்தைப் போன்று அதற்குச் சமனான தனியார் பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்கி விடவேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவதாகவும் இவ்வாறன பணி தான் மரணிக்கும்வரைத் தொடரும் என்றும் தெரிவித்தார்.

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :