அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பெண்கள் தலைமை தாங்கும் வலுவிழந்த 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ் மண்ணை சேர்ந்த கனடாவில் வசிக்கும் மதி வித்யா தம்பதிகள் இந்த உதவிகளை நேற்று முன் தினம் வழங்கி வைத்தார்கள்.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் வேண்டுகோளுக்கிணங்க இந்த உதவி வழங்கப்பட்டது.
கூடவே கஞ்சி குடிச்சாறு லட்சுமி அம்மாள் ஆலயத்திற்கும் ஒரு குடும்பத்தின் மருத்துவச் சிகிச்சை க்கும் ஒரு தொகை நிதி அவரால் வழங்கப்பட்டது.
அதற்காக தம்பதியருக்கு மக்கள் நன்றி தெரிவித்தார்கள்.
0 comments :
Post a Comment