பொகவந்தலாவ பெருந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக டிஜீட்டல் தாரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22.02.2023. புதன்கிழமை பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ பகுதியில் கொட்டியக்கலை, பொகவானை லொய்னோன், ஆகிய தோட்டபகுதியில் தேயிலை கொழுந்தினை அளவீடு செய்ய டிஜீட்டல் தாராசினை பயன்படுத்தி வருவதாகவும் இதன் ஊடாக தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு பத்து கிலோ தேயிலை கொழுந்தினை மேலதிக தொழிலாளர்களிடம் இருந்து அறவீடுவதாக
ஆர்ப்பாட்டம காரர்கள் சுட்டி காட்டினர்
இதேவேளை கடந்த மாதம் பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு டிஜீட்டல் தாராசு ஊடாக மேசடி இடம் பெறுவதாக
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய நுவரெலியா அளவீட்டு தினைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ஊடாக குறித்த தாராசு பறிமுதல் செய்யப்பட்டு விசாரனைகளை மேற்கொண்ட போது குறித்த தாராசு மூன்று வருடகாலமாக முத்திரை பதிக்கப்படவில்லையென விசாரனையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பில் கடந்த வாரம் கொட்டகலை சீ.எல்.எப்.
மண்டபத்தில் தோட்ட முகாமையாளர்களுக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட
உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமனுக்கிடையில் இடம் பெற்ற
கலந்துரையாடலின் போது டிஜீட்டல் தாரசு தேயிலை அளவீட்டு பணிக்கு
பயன்படுத்தப்பட மாட்டாது என தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்த பிறகு பழைய முறையிலைான தாரசு மீண்டு ழூன்று நாட்கள் மாத்திரமே பவனைக்கு
உட்படுத்தபட்டதாகவும் அதற்கு பிறகு கடந்த திங்கள் கிழமை மீண்டும்
டிஜீட்டல் தாராசினை தோட்ட நிர்வாகம் அறிமுகம்படுத்தியமையால் தொழிலாளர் தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதை அடுத்து தொழிலாளர்களின் தேயிலை கொழுந்தினையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
ஏழையின் வயிற்றில் அடிக்காதே,வேண்டாம் வேண்டாம் டிஜீட்டல் தாரசு
வேண்டாம், போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
தொழிலாளர்கள் கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் இருந்து பேரணியாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தினை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்காமைக்கு விசாரனைகளை மேற்கொள்ளபட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
0 comments :
Post a Comment