இருளில் மூழ்கிய அன்னமலை பிரதேச வைத்தியசாலை : தீர்வை வழங்கிய அதிகாரிகள்



மாளிகைக்காடு நிருபர்-
ற்போதைய மின்சார நெருக்கடியினால் அன்னமலை பிரதேச வைத்தியசாலை இருளில் மூழ்குவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்து அதற்கு இன்வெர்ட்டர் மின் பிறப்பாக்க முறைமையினை வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் வியாழக்கிழமை அன்னமலை பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுடன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ.வாஜித் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ. எம் மாஹிர் வைத்தியர் டி.ஆர்.எஸ்.டி.எஸ்.ரஜப் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம். இப்ஹாம் பிரதேச வைத்திய அதிகாரி அணுர உட்பட வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு தலைவர் சீ.கணபதிப்பிள்ளை மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் பங்குபற்றிய குறித்த பிரதேச மக்களும் ஆலயத்தின் பிரதிநிதிகளும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கும் விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் பணிமனையின் பாரபட்சமற்ற சேவைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :