38 வருட அரச சேவையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மருதமுனையின் முதல் நிருவாகசேவை அதிகாரி ஏ.எச்.எம்.அன்சார் கல்முனை பிரதேச செயலகத்தால் கௌரவிக்கப்பட்டார்.கல்முனைபிரதேச செயலகத்தின்'சன் குளோமிங்'(Sun Gloaming)ஒன்று கூடலும்,கௌரவிப்பும் (11-02-2023)சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது..இதன் போது கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட போதே ஒய்வு பெற்ற கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன்.பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி ஆகியோர் ஏ.எச்.எம்.அன்சார் அவர்களின் 38 வருட அரச சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி,மாலை அணிவித்து,நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இங்கு விஷேட அதிதிகளாக பிரதேச செயலாளர்களான அஷ;nஷய்க் எம்.எஸ்.எம்.ரஸ்ஸான்,சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப்,எம்.எம். ஆஷPக்,பிர்னாஸ் இஸ்மாயில்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம்,அம்பாறை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ்,கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் எ.எஸ்.எம். அஸீம்,
மேலும் உதவிப்பிரதேச செயலாளர்களான ஜெசான் ஆஷpக்,அய்மா நிஃமத்துல்லா ஆகியோருடன் அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.எல். ஆதம்பாவா.கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யு.எல்.ஜவாஹிர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களும்,இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment