கொழும்பு 12, உம்மு சவாயா அஜ்வாத் அல் பாசி அரபிக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவும் எட்டாவது அல்-ஆலிம் பட்டமளிப்பும் உம்மு சவாயா பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அல்ஹாஜ் முஹம்மட் அஹ்சான் ராசிக் மரைக்கார் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அல்ஹாஜ் முஹம்மட் அஹ்சான் ராசிக் மரைக்கார் கலந்து சிறப்பித்தார்.
விசேட அதிதியாக ஈ.ஏ.எம்.மெலிபன் டெக்ஸ்டைல் பிரைவட் லிமிடட் தலைவர் அல்ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் மற்றும் மோல்சிப் சிலோன் லிமிடட் தலைவர் அல்ஹாஜ் ஹுஸைன் எஸ்.ஹாசிம் ஆகியோர்களும் கெளரவ அதிதிகளாக தொழிலதிபர்களான அல்ஹாஜ் எம்.எச்.ஏ. ரசாக் ,அல்ஹாஜ் எம்.எச்.ஹாஜா ஹுஸைன் மற்றும் அல்ஹாஜ் எம்.முஸ்தாக் ஜாபிர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் சங்கைக்குரியவர்களான அஷ்ஷெய்யித் பஸீர் தங்கள் அஷ்ஷெய்யித் அத்துகோயா தங்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொருளாளர் கலாநிதி மெளலவி அஸ்வர் அஷாஹிம்((அல் அஷ்ஹர்) உட்பட சாதாத்மார்கள்இ உலமாக்கள் மற்றும் பெருமளவிலான இஹ்வான்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வெளியேறுகின்ற மாணவர்களின் ஊர்வலத்தைத் தொடர்ந்து கிரா அத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மத்ரசா குழுத் தலைவர் அல்ஹாஜ் நுஸ்கி மொஹமட் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உம்மு சவாயா தலைவர் அல்ஹாஜ் எம்.மக்கிகாசிம், அஜ்வாத் அல் பாசி அரபிக் கல்லூரி அதிபர் கலீபத்துஸ் ஸாதுலி மெளலவி எம்.அஹமட் சூபி(மஹ்லரி) ஆகியோர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கற்கையை பூர்த்தி செய்து வெளியேறுகின்ற மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றன.
விசேட பேச்சாளர்களாக கலீபதுஸ் ஸாதுலி அல் ஆலிம் அஷ்ஷெய்யிட் அலவி ஸாலிஹ் மெளலானா அல் முர்ஸி மற்றும் ரயீசுல் முஹத்தமுஸ் ஸாதுலி அல் ஆலிம் மெளலவி எம்.இக்ரம் நிசார் அல் பாசி ஆகியோர்கள் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தினார்கள். மத்ரஸா மாணவர்களின் கஸிதாவும் இடம்பெற்றது.
உம்மு சவாயா மற்றும் அஜ்வாத் அல் பாசி அரபுக் கல்லூரியின் வரலாறு தொடர்பாக கல்லூரியின் விரிவுரையாளர் மெளலவி பாசில் பாரூக் (பஹ்ஜி) எழுதிய நூலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான தலைப்பாகை சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
பிரதம அதிதி மற்றும் முக்கிய அதிதிகள், உலமாக்களினால் மாணவர்களுக்கான அல் ஆலிம் பட்டங்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மௌலவிமார்களுக்கு தலைப்பாகை சூட்டும் நிகழ்வும் இடம் பெற்றது.
நன்றியுரையை மத்ரஸா குழு செயலாளர் ஷெய்யித் ஏ அப்லால் இஸத்தீன் நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment