பள்ளிவாசல்கள் என்பது சமூகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஆத்மீகத் தளங்களாகும். இங்கு ஆத்மீகக் கல்வி மட்டுமல்ல உலகியல் அறிவு மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்கள் இடம்பெறுவது அவசியம். அலைக்கழியும் எமது இளைஞர்களை பள்ளிவாசல்களுடன் இணைக்க எம்மிடம் பல திட்டங்கள் உள்ளன. மார்க்க உபந்நியாசங்கள் இன்னும் பக்தாதுக்கு இணையான நூலகம் ஒன்றை அமைக்கவும் தீர்மானித்திருக்கிறோம் என அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று (19) ஸஹீஹுல் புஹாரி 66 ஆவது பாரயன நிகழ்வும், கந்தூரி வைபவமும் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் உரையாற்றிய போது, அல்லாஹ், ரஸூலின் வழிகாட்டலில் எமது இளைஞர்களை வளர்த்தெடுப்பதில் பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்தத் தளங்களுக்கும் பிரதான இடமில்லை. இதைக் கருத்திற்கொண்டு எமது எதிர்கால செயற்பாடுகள் அமையும் என்றார்.
இந்த ஸஹீஹுல் புஹாரி 66 ஆவது பாரயன நிகழ்வில் மூத்த உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். முப்பது தினங்கள் ஓதப்பட்டு வந்த இந்த மஜ்லிஸ் இன்று 66 ஆவது முறையாக நடைபெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருந்திராளான மக்கள் இதில் கலந்து கொண்டு கந்தூரியின் அன்னதானத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment