நிந்தவூர் விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்லும் கிறவல் வீதி சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
நிந்தவூர் பிரதேச சபை வீதியிலிருந்து வீரக்காடு வரை செல்லும் கிறவல் வீதி பலத்த சேதத்திற்குள்ளாகி அதனூடாக விவசாயிகள் பயணிக்க முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் அதில் மழை நீரும் தேங்கியுள்ளது.
தற்போது பெரும் போக வேளாண்மை அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் உழவு இயந்திரங்களோ , நெல் அறுவடை இயந்திரங்களோ பயணிக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதுடன் அறுவடை செய்த விளைபொருட்களை வயலில் இருந்து ஏனைய இடங்களுக்கு கொண்டு செல்லாத நிலமையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு விவசாயிகள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment