ஆசிரிய ஆலோசகர் ஒருவர் ஓய்வு பெற்றதும் அவரை வலயக்கல்விப் பணிமனையில் பாராட்டி பின்னர் அனைவரும் சேர்ந்து வாகனங்களில் அவரை அவரது வீட்டுக்கு கொண்டு சென்று அங்கும் மனைவி முன் பாராட்டி வாழ்த்திய சம்பவம் சம்மாந்துறையில் நேற்றுமுன்தினம் (27) திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கே எம் எஸ். நஜ்ஜாஸ் நேற்றுமுன் தினம் ஓய்வு பெற்றதும் அவரை வலய கல்வி பணிமனையில் புதிய முறையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
முதலில், வலயக்கல்விப் பணிமனையில் கல்வி சார் உத்தியோகத்தர்கள்
நலன்புரி சங்கத்தின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில்
நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் செய்யட் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.
அங்கு , ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் நஜ்ஜாஸை வாழ்த்தி கல்வி அதிகாரிகள் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து பணிப்பாளர் உமர் மௌலானா பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தார். உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் ஏ.முஸ்ரக்அலி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தார்.
அதன் பின்பு அவரை அனைத்து கல்வியதிகாரிகளும் சேர்ந்து வாகனத்தில் ஏற்றி, அவரை சம்மாந்துறையில் உள்ள வீட்டுக்கு கொண்டு சென்று அங்கும் அவரது மனைவி முன்னிலையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு விழா நடாத்தி வாழ்த்துத்தெரிவித்து விடை பெற்றனர்.
0 comments :
Post a Comment