வாக்குச்சீட்டு அச்சிட போதுமான பாதுகாப்பு இல்லை



J.F.காமிலா பேகம்-
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிக்காக இதுவரை போதுமானளவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் வரை பிரதான வாயிலின் அருகே பொலிஸ் அதிகாரிகள் இருவர் மாத்திரமே கடமையிலீடுபட்டுள்ளனர். இருப்பினும், இவ்வச்சிடும் பணியின் பாதுகாப்பிற்காக 65 பொலிஸ் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலை காரணமாக அச்சிடும்பணிகள் தாமதமாகியுள்ளதாக அரச அச்சக திணைக்கள அதிகாரி கங்கானி லியனகே மேலும் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக பல்வேறு கோரிக்கை சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் ஆணைக்குகுழுவில் எதிர்வரும் 24ம் திகதி, கலந்துரையாடல் ஒன்று இடம் பெற உள்ளது. எதிர்வரும் 23 ம் திகதி அன்று வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக, இதில் கலந்துரையாட உள்ளதாகவும், நீதிமன்ற தீர்ப்புக்கமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க, தீர்மானங்களை எடுக்க உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :