மட்டக்களப்பு,ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் 2023 வருட இல்ல விளையாட்டுப் போட்டி; பாடசாலை அதிபர் DM. உவைஸ் அஹமட் தலைமையில் இன்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G. திசாநாயக்க கலந்து கொண்டார்..
அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவரும் கிழக்கு மாகாண விளையாட்டுத் துறைப் பணிப்பாளருமான N.M. நௌபீஸ், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் . SMM. அமீர் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான J.F. றிப்க்கா மற்றும் MHM. ரமீஸ், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான MIM. முதர்ரிஸ்MHM. நசீர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் . MHM. மாஜித் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
சீரற்ற காலநிலையிலும் விளையாட்டு நிகழ்வுகள் வெகுசிறப்பாக இந் நிகழ்வில் மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் அணி நடைக் கண்காட்சி நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தமை சிற்ப்பம்சமாகும். சீரற்ற காலநிலையிலும் பெருந்திரளான மக்கள் இவ்விளையாட்டுப் போட்டியை நிகழ்வைக் கண்டுகளித்தனர்.
0 comments :
Post a Comment