களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பல்வேறு மரநடுகை திட்டங்கள் கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் முன்பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்ததி சிவரெத்தினம், விவசாய மற்றும் கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளானது எருவில் பாரதிபுரம் முன்பள்ளி பாடசாலை வளாகம் மற்றும் களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சிரமதானம் இடம்பெற்றது.
முன்பிள்ளை பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த. நிர்மல்ராஜ், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment