பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்து நாசம்



அந்துவன்-
தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது.

அட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன்போது இந்த பண்ணைக்கு அருகிலுள்ள கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் வரை தீ பரவியதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டதுடன் இந்நிலையத்தின் ஊழியர்களின் பெரும் முயற்சியின் காரணமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிலையத்தில் காணப்பட்ட நீரை பயன்படுத்தி எரிபொருள் நிலையம் வரை பரவிய தீயினை பெரும் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர். எனினும் இந்த தீ தொடர்ந்து மறுப்புறம் பண்ணையின் புற்தரை வழியாக தொடர்ந்து பரவியது.

பின்னர் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வழமைக்கு திரும்பின.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :