இலங்கை மலாயர் சங்கத்தின் நுாற்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் பெப்ரவரி 26 ஞயிற்றுக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள இலங்கை மலாயர் கிறிக்கட் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சா் கலாநிதி பந்துல குணவர்த்தனவும், இந்தோனோசியா இலங்கைக்கான துாதுவா் தேவி குஸ்ட்டினா ஆகியோர்கள் கலந்து கொண்டு மலாய கலாச்சார நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வில் மலாய சங்கத்தின் உறுப்பினர்களது மலாயர் உணவு முறைகள், கலை,கலாச்சார நிகழ்வுகள் மேடையேற்றபட்டது. சிறந்த நிகழ்ச்சிகளுக்கு பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் . கொழும்பில் உள்ள மலாயர் சமுகத்தினா் பெருமளவில் கலந்து கொண்டனா்.
0 comments :
Post a Comment