திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் வழிகாட்டலில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் தடாக மீன் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிரதேச செயலக உதவிச்செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் 28000 மீன் குஞ்சுகள் விநாயகபுரம் -3 கிராம சேவகர் பிரிவில் வழங்கபட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் மாவட்ட நீரியல் வள உத்தியோகத்தர் அ.ராஜிதன் மற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர.
இந் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் கைத்தொழில் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.ரவிந்திரனின் ஒழுங்குப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment