தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட மீரா நகர்,கல்மெடியாவ தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவில் உலக உணவு திட்டம் மூலமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
உலக உணவு திட்டம் மூலம் வழங்கப்படும் குறித்த 12 கிராம சேவகர் பிரிவிலும் மொத்தமாக 2738 குடும்பங்கள் இதன் மூலமாக தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளிற்கிணங்க (09) கல்மெடியாவ தெற்கு,மீரா நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. குறித்த உலர் உணவுப் பொதிகளானது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கப்பட்டன.
அரிசி,சீனி,பருப்பு உட்பட பல பொருட்கள் இப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது
இதில் கல்மெடியாவ தெற்கு, மீரா நகர் கிராம உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,உலக உணவு திட்ட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment