இலங்கையின் 75வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது



சர்ஜுன் லாபீர்,எம்.என்.எம் அப்றாஸ்-
லங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 75வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(4) நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டது.

மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜபீர், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எச்.ஜனூபா அபிவிருத்தி ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :