துறையூர் விளையாட்டு கழக ஏற்பாட்டில் 75வது சுதந்திர தின விழா!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
துறையூர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இலங்கை தாய் திருநாட்டில் 75வது சுதந்திர தின விழாசம்மாந்துறை ஆலையடிவட்டை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று(04) நடை பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைய இராணுவம் பொறியியல் படைப்பிரிவு நிர்வாக உத்தியோகத்தர்ஏ.எம்.எஸ் ரபீக் , விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்சன், ஜனாதிபதி விளையாட்டு நிலைய விளையாட்டுபயிற்றுவிப்பாளர் ஏ.எம் றியாஸ்,துறையூர் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவர் எம்.டி.என் றிஸா, சம்மாந்துறை கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் எம்.வை.எம் அனீஸ் உட்பட துறையூர் விளையாட்டுக் கழகத்தின்நிர்வாக உறுப்பினர்கள் கழக வீரர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது காலை 8.21 க்கு ஆரம்பிக்கப்பட்டதோடு நிகழ்வின் ஆரம்பமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதமும் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எமது நாட்டுக்காக உயிர் நீத்த தேசிய வீரர்களுக்கு இரண்டு நிமிடமௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும் மைதானத்தில் சிரமதானம் மற்றும் மரநடுகை போன்ற நிகழ்வுகளுடன் விளையாட்டு வீரர்களுக்கானமனவெழுச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய போட்டி நிகழ்ச்சிகள் பலவும் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. அதில்கயிறு இழுத்தல் , சங்கீதக் கதிரை மற்றும் சாக்கோட்டம் போன்ற போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதுடன் இதில்வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இம் மைதானம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இடம்பெறும் முதலாவது சுதந்திர தின விழா இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :