இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு 12 பீர்சாஹிப் ஜூம்ஆப் பள்ளிவாசல், இஹ்ஸானியா அறபுக் கல்லூரி மற்றும் நியாஸ் மௌலவி பவுண்டேசனும் இணைந்து வழமைபோன்று இம்முறையும் தேசிய தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
நியாஸ் மௌலவி பவுண்டேசனின் பணிப்பாளர் மௌலவி லமீர் ஹாபிஸ் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பள்ளிவசல்களின் சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஐ.எம்.இக்பால், கெசல்வத்த பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி டபிள்யு. நந்தசேன, பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள், ஏனைய பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா பிரதிநிதிகள், பிரதேச பாலர் பாடசாலை சிறார்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தேசியக் கொடியை அதிதிகள் ஏற்றி வைத்தன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நியாஸ் மௌலவி பவுண்டேசன் மற்றும் பள்ளிவாசலுக்கு பங்களிப்புச் செய்தவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பாலர் பாடசாலைப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற சிறார்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment