பொது நிருவாக அமைச்சின் அறிவுரையின் பேரில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறந்த கிராமிய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்உணவுப்பாதுகாப்பு குழு தெரிவில் முதலாம் இடத்தை தம்பலகாமம் பாலம்பட்டாறு கிராம உத்தியோகத்தர் குழு வெற்றி பெற்றது.
இதற்கான கேடயமும் சான்றிதழும் திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04)காலை இடம் பெற்ற 75 ஆவது சுதந்திர தின வைபவத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதற்கான பரிசில்களை தம்பலகாமம் பிரதேச செயலக பாலம்போட்டாறு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.தங்கரூபன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளிற்கிணங்க திறம்பட செயற்பட்ட உற்பத்திக்கான விருதினை மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமையை இட்டு வாழ்த்துக்களை சக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விருது வழங்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம ,மாகாண பிரதம செயலாளர் உட்பட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



0 comments :
Post a Comment