தேர்தலுக்காக திறைசேரியிலிருந்து 100 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.-தேர்தல் ஆணையாளர் நாயகம்



J.F.காமிலா பேகம்-
 உள்ளூராட்சிமன்ற தேர்தல் வாக்கெடுப்புக்காக 100 மில்லியன் அரசினால் வழங்கப்பட்டுள்ளதாத தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்" உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு அடையாளப்படுத்தல் ஏற்கனவே கூறியவாறு, இம்மாதம்22,23,24 நடைபெற உள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்வாக்கெடுப்பு பெப்ரவரி10 ம் திகதி என கூறப்பட்டுள்ளது. அவ்வாறே தபால்மூல வாக்கெடுப்பு அடையாளப்படுத்தல் தத்தமது சேவைக்குரிய இடங்களில் 22,23,24 ம் திகதி வாக்களிப்பை செய்யலாம். ஏதோ ஒரு காரணத்தால் இம்மூன்று தினங்களில் வாக்களிக்க முடியாது போனவர்கள், 28ம் திகதி தமது காரியாலய தெரிவத்தாட்சி அழுவலர் முன்பாக தனது வாக்களிப்பை செய்யலாம்.

அவ்வாறே பெப்ரவரி 19 ம் திகதியின் பின் அஞ்சல் திணைக்கள உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு அறிவிப்புகள் வீடுகளுக்கு வினியோகிக்க அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி- சுமார் 36000 க்கு கிட்டிய தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது .

சமன்ஸ்ரீ ரத்நாயக்க அவர்கள்-"ஆம்.36000 தபால் மூலவாக்காளர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கேள்வி-தேர்தலுக்காக திறைசேரியிலிருந்து 100 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாக கேள்வியுற்றோம்.

சமன்ஸ்ரீ ரத்நாயக்க அவர்கள்- ஆம் ,அப்பணம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :