ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 2000 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மாணவர் அமைப்பு (Y2K) ஏற்பாடு செய்த சீருடை அறிமுக நிகழ்வும், கௌரவிப்பும் சனிக்கிழமை (31) மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் எஸ்.எல்.நளீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பிலுள்ள ஏராளமான பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்படவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கல்வி கற்ற காலத்தில் கடமை புரிந்த அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான வெற்றிக் கிண்ணமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிதிகளாக ஓய்வுபெற்ற அதிபர் எம்.சீ.எச்.முகம்மட், ஓட்டமாவடி தேசய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment