மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சிமன்றங்களை இம் முறை ஆட்சி செய்யும்



ஹஸ்பர்-
க்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சிமன்றங்களை இம் முறை ஆட்சி செய்யும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியில் (15)இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் இம் முறை கிண்ணியா நகர பிரதேச சபை,மூதூர் பிரதேச சபை,தம்பலகாமம் குச்சவெளி பிரதேச சபைகளை மக்கள் காங்கிரஸ் அமோக வாக்குகளை பெற்று ஆட்சி செய்யும் .இந்த 13 உள்ளூராட்சி மன்ற சபைகளிலும் தனித்துவமாக மயில் சின்னத்தில் எமது கட்சி போட்டியிட்டு றிசாட் பதியுதீனின் கைகளை பலப்படுத்தி மூவின மக்களின் நம்பிக்கைகளை பெற்ற ஒரு தலைமைத்துவமாக திகழப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :