இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 161 வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சுவாமியின் திருவுருவப் படம் தாங்கிய ரத பவனி மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதி ஊடாக ஊர்வலம் வந்தது.
கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் மற்றும் பழைய மாணவர் இராமகிருஷ்ண மிஷன் அபிமானிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் .
அதைத்தொடர்ந்து கல்லடி மிஷன் குருகுலத்தில் விசேட யாகம் ஹோமம் பூஜை பஜனை என்பன இடம்பெற்றன.
0 comments :
Post a Comment