இலங்கையின் பனை மர உற்பத்திப் பொருட்களை பிரித்தானியா, மற்றும் ஜக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அந்த நாடுகளில் அறிமுகம் செய்யும் நிகழ்வு டிசம்பா் மாதத்தில் இலண்டனில் நடைபெற்றது. இவ் உற்பத்திப் பொருட்களை அந்த நாடுகளில் அறிமுகம் செய்யும் நிகழ்வினை இலங்கையின் பனை அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 2022 டிசம்பா் மாதம் நடாத்திய கண்காட்சியில் பிரான்சிடமிருந்து 45.000 அமெரிக்க டொலர்களுக்கு நம் நாட்டுப் பனை உற்பத்திப் பொருட்களுக்கான பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையிலிருந்து ஏற்றுமதி வர்த்தகமும் கிடைக்கப்பெற்றுள்ளது என பெருந்தோட்ட அமைச்சா் ஊடக மாநாட்டில் தெரிவித்தாா்.
வடக்கில் பெருந்தொகையான உற்பத்திகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்காக பெருந்தோட்ட அமைச்சா் டொக்டா் ரமேஸ் பத்திரனவின் நடவடிக்கையின் பேரில் நவம்பா் டிசம்பா் மாதங்களில் 3 வாரமாக இலண்டன் சந்தையில் இவ் உற்பத்திப் பொருட்கள் கன்காட்சிப்பத்தப்பட்டது, இதனால் இவ் உற்பத்திப் பொருட்களை கவா்ந்த அந் நாட்டு வர்த்தகர்கள் இப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விரும்பம் தெரிவித்து கேள்வி கோரப்பட்டுள்ளது. இவ் உற்பததிகளை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நியச் செலவாணி மற்றும் வடக்கில் உள்ள பனை உற்பத்தியாளா்களுக்கு சந்தை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறந்ததொரு வாய்பாகும். இவ் ஏற்பாடுகளை இலங்கை பனை அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்டம் கைத்தொழில் அமைச்சா் டொக்டா் ரமேஸ் பத்திரன தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment