மாத்தளை யுனைடேட் உதைபந்தாட்ட அகடமி மாணவர்கள் உதைபந்தாட்ட பயிற்சிக்காக இந்தியா பயணம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
திர்காலத்தில் மாத்தளை பிரதேசத்தில் உதைபந்தாட்ட துறையினை மேலும் அதிகரிக்கும் வகையில் மாத்தளை யுனைடெட் உதைபந்தாட்ட அகடமி மற்றும் இந்தியா , கர்நாடகா கிக்ஸ்டாட் உதைபந்தாட்டக் கழகம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு நட்பு அடிப்படையில் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய இலங்கை மாணவர் குழுவிற்கு இரண்டு வாரங்களுக்கு இந்தியா , கர்நாடகாவில் உதைபந்தாட்ட பயிற்சினை வழங்கி இந்தியாவிலுள்ள சமவயது பாடசாலை மாணவர் உதைபந்தாட்ட குழுக்களுடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதைபந்தாட்ட பயிற்சியிலும் சுற்றுப்போட்டித் தொடரில் பங்கேற்கும் மாத்தளை யுனைடெட் உதைபந்தாட்ட அகடமி மாணவர்கள் அண்மையில் இந்தியா பயணமானார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :