தம்பலகாமம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி இறுதிக் கணக்கறிக்கையின் பிரகாரம் பல இலட்சம் ரூபாக்களை இலாபமீட்டியுள்ளதாக தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் இன்று (1)வெளியிட்டுள்ள 2022 ம் ஆண்டின் இறுதி அறிக்கையின் போது இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2022ம் ஆண்டுக்கான இலாப நட்ட கணக்கறிக்கையின் பிரகாரம் தம்பலகாமம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம் இலாப நட்ட கணக்கறிக்கையில் 236,611.77 ரூபாவும் தம்பலகாமம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி 3,849,000.00ரூபாவினையும் இலாபமீட்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் .இதற்காக அயராது பாடுபட்ட பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட சகலருக்கும் இந் நாளில் நன்றியை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment